பொழில்மகிழ்ந்து இருத்தல் புனலாட்டு அயர்தல்
இல்லிடைப் பரத்தையர் இயல்இடைப் பரத்தையர்
கல்வியொடு பழகிய காதல் பரத்தையர்
நல்லியல் நிலைமை நயப்புப் பரத்தையர்
சொல்லிய பரத்தையர் நால்வரும் கூற
ஆங்கவர்ப் புணர்தல் அவர்க்கண் அகறல்
வீங்குமுலைப் பரத்தையர் உழைநின்று விடற்குப்
பாங்கன் தோழி பாணன் என்னும்
ஆங்கவர் முதலியர் இரந்துகுறை உறுதல்
அவர்சென்று இரக்கல் அணியிழை மறுத்தல்
புகர்அறு கோதை பொறுத்தற்குறை இரத்தல்
ஊரன் புகுதல் உவந்துஎதிர் கோடல்
பேராச் சீற்றமொடு பெருமுனிவு பேசல்
விருந்தொடு புகுதல் புதல்வரொடு புகுதல்
திருந்திழை அரிவையைத் திரிந்துஎதிர் கோடல்
செந்நிறக் கோலச் சிறுமி புகுதல்
அந்நிறம் நன்னாள் அருங்கவின் உறைதல்
உள்நிறை உவகையோடு ஒண்ணுதல் உவத்தல்
வெண்ணிறக் கோலத்து மேதக உணர்தல்
பண்அமை கிளவியொடு பள்ளியுள் மகிழ்தல்
அலைபுனல் ஊரன் ஆற்றான் புகுதல்
புலவிகற்பு ஒன்றால் நண்ணிச் சீறல்
ஆற்றான் ஆக அவள்எதிர் ஊடல்
தேற்றேன் என்றல் தெளித்து வழிபடுதல்
வளவயல் ஊரன் வதுவை கேட்டுஉளே
உளம்நனி அடக்கி உவந்தோள் போறல்
பண்ணி விடுதல் பான்மையின் மொழிதல்
எண்ணிய சிறப்பின் எங்கைஎன்று இசைத்தல்
மனைச்செல் பரத்தையை மகிழ்ந்துஎதிர் கோடல்
முனித்தகவு இன்மை முயன்று பண்பு எய்தல்
ஆயிடை அவர்கள் அமர்ந்துஎதிர் கோடல்
போய்அஃது ஈண்டல் புகழ்தல் ஏத்தல்