"அம்மவாழி தோழி"-
"தோழி வேம்பின் பழத்தை உண்ண வௌவால் பறக்கும் மாலைக்
காலமும் தலைவர் பிரிந்து சென்ற தேயத்து இல்லை போலும்" என்று
பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறிய பாலைக்குறுநூற்றுள்,
முல்லைக்கு உரிய மாலைக்காலம் மயங்கிவந்தது.
"கல்மிசை மயில்ஆல"-
"மலையில் மயில் ஆடவும், ஊரவர் அலர் தூற்றவும், இவற்றால் நம்
பண்டை அழகு நுணுகவும், நம்மை மறந்தாலும்மறக்க; பரங்குன்றில்
விளையாடுதலையும் நம் தலைவர் மறந்தாரே!"
என்று பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குக்கூறும் இப்
பாலைக்கலியில், குறிஞ்சித்திணைக்கு உரிய மயில் என்னும் கருப்பொருள்
மயங்கியவாறு.
"உடை இவள் உயிர் வாழாள்"-
"நின்னையே பற்றுக்கோடாக உடைய தலைவி நீ பிரியின் உயிர்வாழாள்
என்று யாம் இரந்து கூறும் சொற்கேளாது பிரிந்துபோகக் கூடிய நின்னை, நீ
செல்லும் வழியில் வறண்ட சுனைகளில் இலையோடு வாடிக்கிடக்கும்
மலர்கள் செலவைத் தடுத்து மீளச்செய்யும்" என்று தோழி தலைவன் பிரிவை
அழுங்குவிக்கும் பாலைக்கலியில், தாமரை முதலிய நீர்ப்பூக்கள் ஆகிய
மருதநிலக் கருப்பொருள்கள் மயங்கியவாறு.
"அன்னாய் வாழிவேண்டு"-
"அன்னையே! தலைவியின் நிறவேறுபாடு கண்டு வெகுண்டு என்னை
வீணாக வினவி என்ன பயன்? இவட்குக், கோங்கம்பூக்கொத்து அளித்த
தலைவனுடைய மார்பு பற்றிய செய்தியை யான் எளிமையில் அறிதல்
இயலுமோ?" என்று