தோழி அறத்தொடு நின்ற இப் பாலைக்குறுநூற்றுள், கோங்கம் என்ற
கருப்பொருளால் பாலைத்திணை அமைந்ததாயினும், பூத்தரு புணர்ச்சி
சுட்டிய வகையான் குறிஞ்சி மயங்கியவாறு.
"வண்சினைக் கோங்கின்"-
"வண்டினம் மொய்ப்பக் கோங்கம்பூ மாலையை அணிவித்து நின்னால்
விரும்பி நுகரப்பட்டாள் யாவள் என்பதனை எமக்கு மறையாது
உரைப்பாயாக" என்று தலைவன் புறத்தொழுக்கம் கூறும் இப் பாலைக்கு
நூற்றுப் பாடலில், கோங்கம் என்ற கருப்பொருளால் பாலை வந்ததாயினும்,
புறத்தொழுக்கத்தால் மருதநிலமும், கருப்பொருளாகிய பரத்தையும்.
உரிப்பொருளாகிய ஊடலும் ஆகிய மருதம் மயங்கியவாறு.
"மழையில் வானம்"-
"வானமீன்கள்போல முசுண்டை வெள்ளிய பூக்களை மலர,
வெண்கோடல் பூக்களை மிகுதியாகச் சூடிய கோவலர், பகலில் மழையால்
வருந்திய ஆன்நிரையோடு நீர்விளங்கும் மாலையினராய் ஊருக்கு மீளுமாறு,
இடியொடு கூடிய மேகம் பெய்த நீர் தெருவில் விரைந்து ஓடும்வண்ணம்
கூதிர்ப்பொழுது நிலைபெற்றது. பகைவரை அஞ்சுவிக்கும் சேனையை உடைய
அரசனுடைய யானைகள் இரவில் சூழ்ந்து நிற்கும் பாசறைக்கண்
தங்கியிருக்கும் நம் தலைவர், நம் நிலையை அறியாவிடினும் தம்
நிலையையாவது அறிந்தாரா?" என்று பருவம் கண்டு வன்புறை எதிர்அழிந்து
தோழியிடம் தலைவி கூறும் இம் முல்லைப்பாடலில், முல்லைக்குரிய
கார்காலம் வாராது குறிஞ்சிக்குரிய கூதிர்க்காலம் "கூதிர் நின்றன்றால்
பொழுதே" என மயங்கி வந்தவாறு.
"மங்குல் மாமழை"-
"மழைபெய்து முடிந்த பிறகு புகைபோன்ற பனிநீர்த்துளி பூக்களின
உள்ளே நிறையவும், பிரிந்த மகளிர் நீர்