என்ற நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் தந்த விளக்கமும் எடுத்துக்
காட்டுக்கள் சிலவும் இவரால் கொள்ளப்பட்டன.
"ஆய்தூவி அனமென"-
"காமம் சாலா இளமையோன்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திய"
முதியோனாகிய கைக்கிளைத் தலைவன், உள்ளத்தால் அவள் புணர்ச்சி கருதி
அவளைத்தான் விரும்புதல் தோன்ற, அன்னம் போலவும், மயில் போலவும்
புறாப் போலவும் அமைந்த அவள் எழில் நலம் அவளைக்கண்ட தன்னை
மயக்குவதாகக் கூறும் இக்கைக்கிளைச் செய்தி, குறிஞ்சித்திணையில் இடம்
பெற்றவாறு.
"எழில் மருப்பு"-
"மதவேழம் அடங்குதல் தவிர்ந்து பாகனது அங்கு சத்திற்கு அடங்காது
போவது போல, அறிவும் அடக்கமும்
23