இல்வாழ்க்கையானது கிழவோன் மகிழ்ச்சி முதலாக நான்கு
வகைப்படும் என்பது. .... 179
தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் முதலிய பத்தும் பிறவும்
இல்வாழ்க்கையின் விரி என்பது. .... 180
வாயில் வேண்டல் முதலிய நான்கும் பரத்தையிற் பிரிவின் வகைகளாம்
என்பது. .... 181
காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு ஏது ஈதாம் இவ்விறைவிக்கு
என்பது முதலாக உரைத்த பதினொன்றும் பிறவும், உணர்த்த உணரும்
ஊடலின் விரிகளாம் என்பது .... 182
வெள்ளணி அணிந்து விடுப்புழி அண்ணல் வாயில் வேண்டல்
முதலிய பதினான்கும் பிறவும், உணர்த்த உணரா ஊடலின் விரிகளாம்
என்பது .... 183
ஆயிழை மைந்தனும் ஆற்றாமையும் வாயிலாக வரவு எதிர்கோடல்
முதலிய நான்கும் பிறவும், உணர்த்த உணரா ஊடற்கு உரிய
ஒழிபாம் என்பது ..... 184
சென்ற மூன்று நூற்பாச் செய்திகளும் பரத்தையிற் பிரிவின்
விரி என்பது. ..... 185
பிரிவு அறிவுறுத்தல் முதலிய ஒன்பதும் பிறவும், ஓதல் முதலிய
ஐவகைப் பிரிவுகளின் வகைகளாம் என்பது. ..... 186
அகப்பொருள் பன்னிருபகுதிப் பட்டுச் செய்யுளுக்கு உறுப்பாய்
வரும் என்பது ..... 187
அப்பன்னிரு பகுதிகளும் திணை கைகோள் கூற்று கேட்போர்
இடன் காலம் பயன் முன்னம் மெய்ப்பாடு எச்சம் பொருள்
வகை துறை என்பனவாம் என்பது. ..... 188