திணையும் கைகோளும் முன்னரே இவ்வியலின் தொடக்கத்தில்
கூறப்பட்டன; திணைகளுள் ஒன்றும் கைகோள்களுள் ஒன்றும்
அகச்செய்யுளுள் தவறாது வரும் என்பது ..... 189
பார்ப்பான் முதலிய அறுவரும் களவுக்காலக் கூற்றிற்கும்,
அவ்வறுவரோடு பாணன் முதலிய அறுவரும் சேரப் பன்னிருவரும்
கற்புக்காலக் கூற்றிற்கும் உரியர் என்பது. ..... 190
ஊரவர் முதலியவருடைய கூற்றுக்கள் நேர்முகமாக அமையாது
கொண்டுஎடுத்து மொழிப்படும் என்பது ..... 191
தலைவனொடும் தலைவியொடும் தலைவியின் நற்றாய்
நேர்முகமாகக் கூற்று நிகழ்த்தாள் என்பது ..... 192
நற்றாயும் செவிலித்தாயும் கூற்று நிகழ்த்துங்கால், அவர்கள்
கூற்று இன்னாரோடு இன்னுழி ஆம் என்பது ..... 193
கண்டோர் தாயர் பாங்கியர், தலைவன் தலைவியரோடு
கூற்று நிகழ்த்துவர் என்பது. ..... 194
தலைவிதமர் உடன்போக்கில் தொடர்ந்துவரின், தலைவன்
தலைவியோடு ஆணையும் கூறும் என்பது ..... 195
உடன்போய் மீண்ட தலைவி பின், கற்புக்காலத்துப் பிரிவுழித்
தலைவனொடு சுரத்து இயல்பு கூறுவள்; பிரிந்துழிச் சுரத்து
இயல்பு நினைந்து நெஞ்சொடும் பிறரொடும் வருந்திக்
கூறுவள் என்பது ..... 196
விதந்து கூறப்படாத பார்ப்பான் முதலியோர், தேவைப்பட்ட
இடங்களில் தலைவன் தலைவியரோடு கூற்று நிகழ்த்துவர் என்பது. ..... 197