பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                               23


 

 காமம் இடையீடு பட்டவழித் தலைவனும் தலைவியும் அஃறிணைப்
  பொருள்களோடும், கேட்குந போலவும் கொண்டு, கூற்று
  நிகழ்த்துதல் முதலியன நிகழும் என்பது.                       ..... 198

 காமம் இடையீடு பட்டுழிக் கனாக் கண்டு அதனைப் பிறருக்குக்
  கூறுதல் தலைவன் தலைவியருக்கு உண்டு என்பது               ..... 199

 பிறரொடு கூறாதே தாமே கூறி அமைதியுறுதலும் உண்டு என்பது    ..... 200

 தலைவன்கூற்றும் தலைவிகூற்றும் மறையோர் முதலிய பதின்மரும்,
  மறையோன் கூற்றும் அறிவர் கூற்றும் இறையோன் முதலிய
  ஏனையோரும் கேட்பர் என்பது                              ..... 201

 ஒருவழிப்பட்டு ஓர் இலக்கணத்தான் முடியும் கருமநிகழ்ச்சி
  இடம் எனக் கூறப்படும் என்பது.                             ..... 202

 இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற முக்காலத்தும் பொருள் நிகழ்ச்சியை
  உரைப்பது காலமாகும் என்பது.                              ..... 203

 இதனால் இது மிகவும் பயக்கும் என்று தொகுத்துச் சொல்லப்படும்
  பொருள் பயன் என்னும் உறுப்பாம் என்பது.                   ..... 204

 இவ்விடத்து இம்மொழி இவர் இவர்க்கு உரிய என்று குறிப்பான்
  அறியுமாறு செய்வது முன்னமாகும் என்பது.                    ..... 205

 உய்த்துணர்ச்சியின்றி உடலின் வரும் வேறுபாடுகள் கொண்டு
  அறிவது மெய்ப்பாடாகும்; அம்மெய்ப்பாடு நகை முதலாக உவகை
  ஈறாக எட்டுவகைப்படும்; அவை ஒவ்வொன்றும் நந்நான்கு
  நிலைக்களன்களை உடைய என்பது                            .....206