இவை போலவே, உடைமை இன்புறல் முதலிய மெய்ப்பாடுகளும்
உண்டு என்பது ..... 207
புகுமுகம் புரிதல் முதலிய பன்னிரண்டும், பாராட்டெடுத்தல் முதலிய
பன்னிரண்டும் முறையே புணர்ச்சிக்கு முன்னும் புணர்ச்சியின்
பின்னும் நிகழும் மெய்ப்பாடுகள் என்பதும், இன்பத்தை வெறுத்தல்
முதலிய பன்னிரண்டும் கற்பினும் களவிற்கே சிறந்த மெய்ப்பாடுகள்
என்பதும், முட்டுவயின் கழறல் முதலிய எட்டும் வரைதல்
வேட்கையைப் புலப்படுத்தும் மெய்ப்பாடுகள் என்பதும், தெய்வம்
அஞ்சல் முதலிய பதினொன்றும் கற்பிற்கு உரிய மெய்ப்பாடுகள்
என்பதும், நிம்பிரி முதலிய பன்னிரண்டும் நற்காமத்திற்கு ஆகா
மெய்ப்பாடுகள் என்பதும் ..... 208
கூற்றினானும் குறிப்பினானும் முடிக்கப்படும் இலக்கணத்தோடு
கூடிய கிளவிகள் எச்சமாகும் என்பது. ..... 209
எல்லாத் திணைகளுக்கும் பொதுவாய்ச் செய்யப்படும் பொருட்கூறு
பொருள்வகையாம் என்பது ..... 210
பிறதிணைப் பொருள்கள் ஒரு நிலத்தில் பொருந்தி அந்நிலத்திற்கு ஏற்ற
இயல்பைப் பொருந்துதல் துறையாம் என்பதும், கவிக்கூற்றும் துறையுள்
அடங்கும் என்பதும். ..... 211
பாடல்களில் உவமப்பொருளும் இறைச்சிப்பொருளும் திணையை
உணர்த்தப் பயன்படும் என்பது. ..... 212
உவமமானது உள்ளுறை உவமம், வெளிப்படை உவமம் என்று
இருவகைப்படும் என்பது ..... 213
உள்ளுறை உவமம் உய்த்துணர் வகைத்தாய்க் கருப்பொருள்
களனாத் தோன்றும் என்பது. ..... 214