"கோடலஞ்செங்கை" - "தலைவியரோடு கூடிய சுவட்டுடனே பாதிரிமரச்
சோலைகளிலும் மணற்குன்றங்களிலும் பழகி நம்மிடையே ஆடலும் பாடலும்
கண்டு பாராட்டுவதைத் தவிர, நம்மிடம் அன்போடு ஊடலும் கூடலும்
நிகழ்த்துபவன் அல்லன் தலைவன்" என்றவாறு.
"தேமேகுவளையும்" -
"தலைவியர் தலைவரைக் கவர்ச்சி செய்வதற்குரிய தனங்களை
உடையவராய் இருந்தும், செந்நெல்லையும் கரும்பையும் குவளையுடன்
இடைதெரிபு இன்றி மாடுகள் மேயும் வயல்களை உடைய ஊரனுடைய
மார்பினை யாமே விரும்பிக் கைப்பற்றினேம் என்று ஏசுவது தம்மைத்தாமே
ஏசிக்கொள்வதேயாம்" என்றவாறு.
"அரியார்விழி" -
"தலைவி தலைவனைத் தன் ஆயத்தாரோடு புறம் போகாது காப்பினும்,
அவளைவிடுத்து என்னிடம் அவன் வாராது ஒழியின், கீழ்மக்கள்
செல்வம்போல என் கை வளையல்கள் உடைபட்டுச் சிதைவன ஆகுக"
என்றவாறு.