வெளிப்படை உவமம் வினை, பயன், வடிவு, நிறம் என்று
நால்வகைப்படும் என்பது. ..... 215
இறைச்சிப் பொருள் பொருளின் புறத்தே புலப்படும் என்பது .....216
முதியவன் காமஞ் சாலா இளமையோளை வருணித்து அவள் மறுமாற்றம்
தாராத நிலையினும் தானே பேசி இன்புறுதலே சிறப்பான
கைக்கிளையாம் என்பது. ..... 217
இக்கைக்கிளை தலைமைப்பாடு இல்லாதவருக்கும் இழி
குலத்தோருக்குமே உரித்து என்பது ..... 218
மடல் ஏறுதல் முதலிய நான்கும் சிறப்பில்லாப் பெருந்திணை
என்பது. ..... 219
பாட்டுடைத் தலைவன் கிளவித்தலைவன் எனப்பாடலுள் தலைவர்
இருவர் சுட்டப்படுவர் என்பது ..... 220
அவருள் பாட்டுடைத் தலைவனே உயர்ந்தோன் என்பது. ..... 221
நிலப்பெயர் முதலிய ஐந்தானும் பாட்டுத் தலைவரும், இயற்பெயர்
ஒழிந்த ஏனைய பெயர்களால் கிளவித் தலைவரும் சுட்டப்படுவர்
என்பது ..... 222
கிளவித்தலைவனுக்கு இயற்பெயர் கூறார் என்பது ..... 223
ஒரே பாடலில் இருவரும் ஒருசேர வருதலும், அவருள் ஒருவரே
வருதலும், ஒருவரும் வாராதுஒழிதலும் நிகழும் என்பது ..... 224
அகப்புறப் பாடலும் அகப்பாடல் இலக்கணத்தைப் பெரும்பாலும்
ஏற்கும் என்பது. ..... 225
கூறியது கொண்டு கூறாததனையும் உய்த்துணர்ந்து கொள்ளுதல்
பண்பாளர் கடமை என்ற இயல் புறனடை இஃது என்பது. ..... 226
4