அறவெற்றிகளுள் சிறந்த வெற்றிகளாகத் தொல்காப்பியனார் புறத்
திணையியல் வாகைத் துறைபற்றிய நூற்பாவின் இறுதியில் சுட்டியுள்ளார். தொல். பொ. 76
இதுகாறும் அகத்திணை பற்றிய பொதுச்செய்திகள் கூறப்பட்டன. இனி,
களவு என்ற கைகோள் பற்றிய செய்தி விரித்துரைக்கப்படும்.
களவியற்செய்தி இவ்வியல் 113 ஆம் நூற்பா முதல் 155 ஆம் நூற்பா
முடியக் கூறப்படுவது காண்க.