பக்கம் எண் :

 தொல்காப்பிய நூற்பாக்கள்


 

 115 ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
     ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
     ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
     மிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே.                தொல்.பொ.93

 116. பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
     உருவு நிறுத்த காம வாயில்
     நிறையே அருளே உணர்வொடு திருஎன
     முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.                        273

 190. பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
     சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியோடு
     அளவியல் மரபின் அறுவகை யோரும்
     களவியல் கிளவிக்கு உரியர் என்ப                            501

     பாணன் கூத்தன் விறலி பரத்தை
     யாணம் சான்ற அறிவர் கண்டோர்
     பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா
     முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகைஇத்
     தான்னெறி மரபின் கற்பிற்கு உரியர்.                          502

 191. ஊரும் அயலும் சேரி யோரும்
     நோய்மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும்
     கொண்டெடுத்து மொழியப் படுவது அல்லது
     கூற்றுஅவண் இன்மை யாப்புறத் தோன்றும்.                    503

 192. கிழவன் தன்னொடும் கிழத்தி தன்னொடும்
     நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது                            504

 198. நோயும் இன்பமும் இருவகை நிலையின்
     காமம் கண்ணிய மரபுஇடை தெரிய
     எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய