பக்கம் எண் :

 264                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     என்புழிப் பொய்த்தவன் மலையும் இலங்கும் அருவித்து என வியந்து
 கூறித் தம்மலைக்கு நன்றி இயல்பு என்றலின், இது வரை வேறு என்பதாம்.
 பிறவாறு வருவன உளவேல், அவையும் ஈண்டே அமைத்துக்கொள்க.

விளக்கம்

     [இந்நூற்பா தொல்காப்பியப் பொருட்படலத்து 93ஆம் நூற்பா. இதன்
 உரை பெரும்பான்மையும் நச்சினார்க்கினியத்தையும் சிறுபான்மை
 உரையாசிரியத்தையும் ஒட்டி வரையப்பட்டுள்ளது.

     தலைவன் தலைவியரை மறுபிறப்பினும் ஒன்றுவிக்கும் ஊழ் எனவும்,
 வேறாக்கும் ஊழ் எனவும் இருவகைப்படும். ஊழினுள் ஒன்றுவிக்கும் ஊழே
 ஈண்டுக் கொள்ளப்படுவது.

     உயர்ந்தபால்-உயர்தற்குக் காரணம் ஆகிய பால் எனப் பெயரெச்சம்
 காரணப் பொருட்டாய் நின்றது; நோய் தீர்ந்த மருந்து-நோய்தீர்தற்குக்
 காரணம் ஆகிய மருந்து என்று பொருள் படுமாறுபோல.

     "இவன் இவள்" -

     குழந்தைப்பருவத்தில் செவிலியர் விலக்கவும் விலகாது கலாய்த்துத்
 தலைமயிரைப் பிடித்துக்கொண்டு சிறு கலாம் விளைத்தார் இருவர்,
 இரட்டைமலர்கள் பிணைத்துக் கட்டப்பட்ட  மாலைபோல் மனம் மகிழ்ந்த
 தலைவன்தலைவியர் ஆயினர் என்று கூறலின்,  இருவரும் ஒரே நிலத்தவர்
 ஆதல் பெறப்படுகிறது.

     சூள்பொய்த்த தலைவன்மலையில் அருவிநீர் ஓடுகிறது என அவன்
 மலையை வேறுபடுத்திக் கூறியமையின்,இருவரும் வெவ்வேறு இடத்தவர்
 ஆதல் பெறப்படுகிறது.