பக்கம் எண் :

 266                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 கொய்தும்" என்றும், "மயிலொடு மாறு ஆடுதும்" என்றும், "குயிலொடு மாறு
 கூறுதும்" என்றும், "அருவிஆடி அம்சுனை குடைகுதும்" என்றும்,
 "வாசமலர்க் கொடியின் ஊசல்  ஆடுதும்" என்றும் பரந்து அப்பாலார்
 இப்பால் உள்ளாள் கொல்லோ?" என்றும்,இப்பாலார்  "அப்பால் உள்ளாள்
 கொல்லோ?" என்றும் இவ்வகை நினைத்துப் பிரிவர் என்க.

     இவ்வகைத் தமியளாகப் பிரிவரோ எனின், எட்டியும் சுட்டியும்
 காட்டப்படும் குலத்து உள்ளாள் அல்லாள் ஆதலானும், பான்மை
 அவ்வகைத்து ஆதலானும் பிறவாறு நினையார்  பிரிவர் என்க.

     ஆயின், இவ்வகைப்பட்ட ஆயத்திடை மேனாள் பிரிந்து அறியாதாள்
 தமியளாய் நிற்குமோ எனின், நிற்கும்; தான் பயின்ற இடமும் தன்
 ஆயத்தோடு ஒக்கும் ஆகலான். யாங்கனம் நிற்குமோ எனின், சந்தனமும்
 சண்பகமும் தேமாவும் தீம்பலாவும், ஆசினியும்  அசோகமும் கோங்கமும்
 வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும்
 மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணம் கமழ்ந்து, பாதிரியும்
 பாவைஞாழலும் பைங்கொன்றையொடு பிணி அவிழ்ந்து, பொரிப்புன்கும்
 புன்னாகமும் முருக்கினொடு முகை  திறந்து, வண்டுஅறைந்து. தேன்ஆர்த்து,
 வரிக்குயிலினம் வரிபாடச் சிறுதென்றல் இடைவிராய்த்  தனியவரை முனிவு
 செய்யும்பொழில் துன்றி, அவணதோர் மாணிக்கச் செய்குன்றின்மேல்
 விசும்புதுடைத்துப் பசும்பொன் பூத்து வண்டு துவைப்பத் தண்தேன்
 துளிப்பதொரு வெறியுறும்  நறுமலர் வேங்கைகண்டாள்; கண்டு, பெரியதொரு
 காதல் களிகூரத் தன்செம்மலர்ச் சீறடிமேல்  சிலம்புகிடந்து சிலம்பு புடைப்ப
 அம்மலர் அணிகொம்பர் நடைகற்பது என நடந்துசென்று,  நறுவிய வேங்கை
 நாள்மலர் கொய்தாள்; கொய்தஇடத்து, மரகதவிளிம்பு அடுத்த
 மாணிக்கச்சுனை  மருங்கின் ஒருமாதவி வல்லிமண்டபத்தில் போது வேய்ந்த
 பூநாறு பொழில் நிழற்றககடிக்குருக்கத்திக் கொடிப் பிடித்துத் தகடுபடு பசும்