உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல்
மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும்
சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச்
செய்யா மரபின் தொழில்படுத்து அடக்கியும்
அவரவர் உறுபிணி தமபோல் சேர்த்தியும்
அறிவும் புலனும் வேறுபட நிறீஇ
இருபெயர் மூன்றும் உரிய வாக
உவம வாயில் படுத்தலும் உவமம்
ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி தொல். பொ. 196
199. கனவும் உரித்தால் அவ்விடத் தான. 197
202. ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்
கரும நிகழ்ச்சி இடம்என மொழிப. 513
203. இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணரப்
பொருள்நிகழ்வு உரைப்பது காலம் ஆகும் 514
204. இதுநனி பயக்கும் இதனான் என்னும்
தொகைநிலைக் கிளவி பயன்எனப் படுமே 515
205. இவ்விடத்து இம்மொழி இவர்இவர்க்கு உரியஎன்று
அவ்விடத்து அவரவர்க்கு உரைப்பது முன்னம். 519
206. உய்த்துணர்வு இன்றித் தலைவரு பொருளின்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும் 516
அவைதாம்,
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன்று
அப்பால் எட்டாம் அவ்வகை எட்டும். 251
எள்ளல் இளமை பேதைமை மடமே. 252
இளிவே இழவே அசைவே வறுமை 253