பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா-120                              279


 

ஒத்த நூற்பாக்கள் 

    "காமப் புணர்ச்சியும் இடந்தலைப் பாடும்
     பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வும்அன்று
     ஆங்கநால் வகையினும் அமைந்த சார்பொடு
     மறைஎன மொழிதல் மறையோர் ஆறே"

                                                தொல். பொ. 498

    "இயற்கை பாங்கன் இடந்தலை மதியுடன்
     இருவரும் உள்வழி அவன்வரவு உணர்தல்
     முன்உறவு உணர்தல் குறைஉற உணர்தல்
     நன்னிலை நாணம் நடுங்க நாடல்
     மடல்குறை நயப்பு வழிச்சேட் படுத்தல்
     இடம்மிகு பகற்குறி இரவுக் குறியோடு
     ஒருவழித் தணத்தல் உடன்கொண்டு ஏகல்
     வரைவு முடுக்கம் வரைபொருள் பிரிதல்
     ....... ....... இவை என மொழிப". திருக்கோவை.

மூ. வீ. கள. 6 

"முழுதும்  ந. அ. 123 

    "கைகோள் இரண்டுஎனக் காட்டிய வற்றுள்
     களவிற்கு உரிய கிளவித் தொகைதான்
     இயற்கைப் புணர்ச்சி வன்புறை தெளிவே
     பிரிவுழி மகிழ்ச்கி பிரிவுழிக் கலங்கல்என்று,
     ஒருவகை ஐந்துஎன உணர்த்தினர் புலவர்"

மா. அ. 12 

    "இடந்தலை பாங்கற் கூட்டம் பாங்கிமதி
     உடன்படுதல் மூன்றினொடு ஒருவகை ஐந்தே".              " 13

    "பாங்கியிற் கூட்டம் பகற்குறி பகற்குறி
     இடையீடு இரவிற் குறிஇர விற்குறி
     இடையீடு என்ன இவையும்ஓர் ஐந்தே".                    " 14

    "வரைவு வேட்கை வரைவு கடாதல்
     ஒருவழித் தணத்தல் வரைபொருள் பிரிவுஎன
     இருநிலம் ஒன்றுஒழி இருபான் என்ப".                     " 15

                                                            120