பக்கம் எண் :

 284                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

ஒத்த நூற்பாக்கள் 

    "முன்னிலை ஆக்கல் சொல்வழிப் படுத்தல்
     நன்னயம் உரைத்தல் நகைநனி உறாஅது
     அந்நிலை உரைத்தல் மெலிவுவிளக் குறுத்தல்
     தன்நிலை உரைத்தல் தெளிவுஅகப் படுத்தல்
     இன்னவை நிகழும் என்மனார் புலவர்"

தொல். பொ. 101 

    "மெய்தொட்டுப் பயிறல் பொய்பா ராட்டல்
     இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்
     நீடுநினைந்து இரங்கல் கூடுதல் உறுதல்
     சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்
     தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇப்
     பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்".

102 

முழுதும் - ந. அ. 126 

    "உவகை உரைத்தல் மறுத்தல் உடன்படல்
     புணர்தல்என்று இறைவியின் புணர்ச்சிநால் வகைத்தே.

மா. அ. 18 

122 

தலைவியின் புணர்ச்சியின் விரி

 495 இரந்துபின் நிற்றற்கு எண்ணலும்1 இரந்து
     பின்னிலை நிற்றலும்2 முன்னிலை ஆக்கலும்3
     மெய்தொட்டுப் பயிறலும்4 பொய்பா ராட்டலும்5
     இடம்பெற்றுத் தழாஅலும்6 வழிபாடு மறுத்தலும்7
     இடையூறு கிளத்தலும்8 நீடுநினைந்து இரங்கலும்9
     மறுத்துஎதிர் கோடலும்10 வறிதுநகை தோற்றலும்11
     முறுவல்குறிப்பு உணர்தலும்12 முயங்குதல் உறுத்தலும்13
     புணர்ச்சியின் மகிழ்தலும்14 யுகழ்தலும்15 பிறவும்
     உணர்த்திய தலைவியின் புணர்ச்சியின் விரியே.

   இது தலைவியின் புணர்ச்சியின் விரி இத்துணைப் பகுதித்து என்கின்றது.