பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா-123                              287


 

     தேன்இமிர் நறவின் தேறல் போல
     நீதர வந்த நிறைஅழி துயரம்
     ஆடுகொடி மருங்குல்நின் அருளின் அல்லது
     பிறிதில் தீராது என்பது பின்நின்று
     அறியக் கூறுகம் எழுமோ நெஞ்சே
     நாடுவிளங்கு ஒண்புகழ் நடுதல் வேண்டித்தன்
     ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை நிறுத்த
     பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்
     கொற்கைஅம் பெருந்துறைக் குனிதிரை தொகுத்த
     விளங்குமுத்து உறைக்கும் வெண்பல்
     பன்மாண் சாயல் பரதவர் மகட்கே. (குணநாற்பது)

 எனவரும்,

     ஆடு கொடி மருங்குல் என்பது அண்மை விளி.

     ஆடு கொடி மருங்குலாய்! நீ தரவந்த நிறைஅழிதுயரம் நின் அருளின்
 அல்லது தீராது எனப் பொருள் உரைத்துக் கொள்க. இதனைத் தலைவன்
 தோழியை இரந்து பின் நிற்றற்கு இயைந்து கூறுதலாகவும் உரைப்ப.

     [நெஞ்சே! நாட்டில் நிலைபெற்ற புகழை நாட்டுதற்காகத் தன் மழை
 போன்ற வண்மையை உடைய கையினை அறுத்து நீதியை நிலைபெறச்
 செய்த பொற்கைப் பாண்டியனுக்கு உரியதான கொற்கைத் துறைக்கண்ணே
 வளைந்த அலைகளால் கொண்டு சேர்க்கப்பட்ட ஒளிமிக்க முத்துப் போன்ற
 வெள்ளிய பற்களையும் பல மாட்சிமைப்பட்ட மென்மையையும் உடைய
 செம்படவப் பெண்ணை நோக்கி, "அசையும் கொடிபோன்ற மருங்குலாய்,!
 கள் உண்ணாமையால் வந்த நோயைத் தீர்ப்பதற்கு ஏனைய மருந்துகளோ
 நோய் தீர்க்கும் மணிகளோ தவமுயற்சியானாகிய மந்திரங்களோ போக்குதல்
 இயலாமல் அக்கள்ளே அந்நோய் தீர்க்கும் மருந்து ஆமாறுபோல, உன்னால்
 ஏற்பட்ட நிறை அழிதற்குக் காரணமாகிய நோய், மருந்து மணி
 மந்திரங்களால்