பக்கம் எண் :

 அகத்திணையியல் - தொல். நூற்பாக்கள்                      29


 

     புறம்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்
     கலங்கி மொழிதல் கையறவு உரைத்தல்எனக்                   266

     காட்சிமுதல் ஆறையும் கண்ணிஒன்று ஈரிரண்டு
     ஆட்சியின் அமைந்தஈ ராறுமெய்ப் பாடும்
     அன்ன பிறவும் அகன்ஐந் திணைக்கண்            தொல். பொ. 267

      துன்னும் என்ப துணிந்திசி னோரே.
 209. சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை
     புல்லிய கிளவி எச்சம் ஆகும்.                                                             518

 210. இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
     ஒழுக்கமும் என்றிவை இழுக்குநெறி இன்றி
     இதுவாகி இத்திணைக்கு உரிப்பொருள் எனாது
     பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்ப.                      520

 211.அவ்வம் மாக்களும் விலங்கும் அன்றிப்
     பிறஅவண் வரினும் திறவதின் நாடித்
     தத்தம் இயல்பின் மரபொடு முடியின்
     அத்திறம் தானே துறைஎனப் படுமே.                         521

 216. இறைச்சி தானே பொருள்புறத் ததுவே.                        229

 217. காமம் சாலா இளமை யோள்வயின்
     ஏமம் சாலா இடும்பை எய்தி
     நன்மையும் தீமையும் என்றுஇரு திறத்தால்
     தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
     சொல்எதிர் பெறாஅன் சொல்லிஇன் புறுதல்
     புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.                      50

 219. ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
     தேறுதல் ஒழித்த காமத்து மிகுதிறம்
     மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
     செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.                     51