பக்கம் எண் :

நூற்செய்தி


[சூத்திர எண்]

 
தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் கூறுவன் என்பது. .... 1
 
அறம்பொருள் இன்பம் வீடு என்ற உறுதிப்பொருள் நான்கனுள் மனம்
  மொழிகளைக் கடந்த வீடு பேறு நீங்கலான ஏனைய மூன்றும்,
தமிழ்ச் செய்யுட்களில் அகம் எனவும், புறம் எனவும் வழங்கப்படும் என்பது
 .... 2
     
அகமாவது அறம் பொருள் இன்பம் என்ற உறுதிப் பொருள் மூன்றனுள்,  
  உள்ளத்தான் உணரப்படும் இன்பமாகிய காம ஒழுக்கம் என்பது. .... 3
     
அகம், கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என எழுவகைப்படும்  
  என்பது. .... 4
     
கைக்கிளைஒருதலைக்காமம்; ஐந்திணை அன்புடைக்காமம்; பெருந்திணை  
  பொருந்தாக்காமம் என்பது .... 5
     
அகப்பொருள், புனைந்துரை உலகியல் என்ற இரண்டையும் சேர்த்துப்  
  பண்டை மரபு வழுவாமல் கூறப்படும் என்பது. .... 6
     
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன ஐவகைத்  
  திணைகளுக்கும் உரிய பெயராம் என்பது. .... 7
     
ஐந்திணைப்பொருள்கள், முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள்  
  என மூவகைப்படும் என்பது .... 8
     
முதற்பொருள், நிலன் எனவும் பொழுது எனவும் இரு வகைப்படும்  
  என்பது .... 9