அவை, ஓரிரண்டு ஓரிரண்டு உரைத்தஐந் திணைக்கும்
நேரும் என்மனார் நெறிஉணர்ந் தோரே. 21
ஒருதலைக் காமமும் ஒவ்வாக் காமமும்
விரவியும் வரூஉம் மரபின என்ப. 23
காட்சி வேட்கை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்ற
ஐயிரு அவத்தையும் பெய்கழல் காளையும்
புகுமுகம் புரிதல் முதல ஆகிக்
காட்சிமுதல் மூன்றையும் கருதிநந் நான்காய்
ஆட்சியின் அமைந்தஈ ராறுமெய்ப்பாடும்
முருந்துஇள முறுவலும் பொருந்துதல் உறினே
மெய்யுறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே 33
கூறிய அகப்பொருள் ஆறிரு வகைத்தாய்ப்
பாட்டுறுப் பாய்வரூஉம் பண்பிற்று என்ப
போக்கறு மரபின் புல்லிய நெறித்தே 187
திணையே ........ அப்பால் ஆகும்அவ் வாறிரு வகையே 188
முன்னவை இரண்டும் சொன்னவை யாய்அவற்று
ஒன்றுஅவண் வருதல் ஒன்றித் தோன்றும் 189
கிழவோன் தன்னொடும் கிழத்தி தன்னொடும்
நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது 192
இவையன்றித் தொல்காப்பிய நூற்பாக்களும் இறையனார்
களவியல்
நூற்பாவும் நீங்கலான யாவும் நம்பியகப் பொருள்
நூற்பாக்களைத் தனித்தும்
இணைத்தும் கொண்டனவேயாம்.