பக்கம் எண் :

 320                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

விளக்கம் 

 1 தலைவன் தன் உயிர்த்தோழனைச் சென்று அடைதல்.

 2 பாங்கன் தலைவனுடைய தோள்மெலிவு முதலியனகண்டு, அவனுக்கு
   ஏற்பட்ட புதுமை பற்றி வினவுதல்.

 3 தலைவன் தனக்கு நேர்ந்த புதுஅனுபவம் பற்றி உரைத்தல்.

 4 கற்று வல்ல பாங்கன் தலைவனை இடித்து உரைத்தல்.

 5 பாங்கன் இடித்துக் கூறியதைத் தலைவன் மறுத்துச் சொல்லுதல்.

 6 பாங்கன் தலைவனைப் பழித்துக் கூறுதல்.

 7 தலைவன் தலைவியின்பால் தனக்கு உள்ள விருப்பத்தைத் தடுத்தல்
   இயலாது என்று குறிப்பிடுதல்.

 8 பாங்கன் தலைவன்நிலைகண்டு தன்மனத்துள்ளே வருந்துதல்.

 9 பாங்கன் தலைவனோடு சேர்ந்து வருந்துதல்.

 10 தலைவன் கண்ட உருவம் எவ்விடத்தில் உள்ளது, எவ்விலக்கணத்தை
   உடையது என்று பாங்கன் தலைவனைக் கேட்டல்.

 11 "தலைவியின் உருவம் இத்தகையது, இயல் இத்தகையது" என்று
   தலைவன் பாங்கனிடம் குறிப்பிடுதல்.

 12 பாங்கன் தலைவனை ஆற்றுவித்தல்.

 13 தலைவன் குறித்த இடத்திற்குப் பாங்கன் செல்லுதல்.

 14 அங்ஙனம் சென்ற பாங்கன் தலைவியைக் காணுதல்.

 15 தலைவியைக் கண்ட பாங்கன் முன்னம் தலைவனைத் தான்
   இகழ்ந்ததற்கு வருந்துதல்.

 16 தலைவியின் அழகைக் கண்ட தலைவன் அதில் ஈடுபட்டு அங்கேயே
   இருந்துவிடாமல் மனத்திட்பத்தோடு தன் இடத்து வந்தமையைப்
   பாங்கன் வியந்து கூறுதல்.