பெட்ட வாயில்பெற்று இரவுவலி உறுப்பினும்
ஊரும் பெயரும் கெடுதியும் பிறவும்
நீரில் குறிப்பின் நிரம்பக் கூறித்
தோழியைக் குறையுறும் பகுதியும் தொ.பொ. 102
இரந்துகுறை பெறாஅது தோழியும் செவிலியும்
ஒருங்குதலைப் பெய்த செவ்வி நோக்கிப்
பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப்
புதுவோன் போலப் பொருந்துவ கிளந்து
மதியுடம் படுத்தற்கும் உரியன் என்ப இறை கள 6
156. கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான. தொல். பொ. 143
157. கரணம் பிழைக்கின் மரணம் பிழைக்கும். பழைய நூற்பா
195. இடைச்சுர மருங்கின் கிழவன் கிழத்தியொடு
வழக்கியல் ஆணை கிளத்தற்கும் உரியன். தொல். பொ. 506
208. இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்
எதிர்பெய்து பரிதல் ஏதம் ஆய்தல்
பசிஅட நிற்றல் பசலை பாய்தல்
உண்டியில் குறைதல் உடம்புநனி சுருங்கல்
கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்
பொய்யாக் கோடல் மெய்யே என்றல்
ஐயம் செய்தல் அவன்தமர் உவத்தல்
அறன்அளித்து உரைத்தல் ஆங்குநெஞ்சு அழிதல்
எம்மெய் ஆயினும் ஒப்புமை கோடல்
ஒப்புவழி உவத்தல் உறுபெயர் கேட்டல்
நலத்தக நாடின் கலக்கமும் அதுவே. 270
முட்டுவயின் கழறல் முனிவுமெய் நிறுத்தல்
அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல்
5