நெஞ்சம், துயரம் நீங்கி இவ்வணங்கின் தோள்களை மருவும் வாய்ப்பினை அளித்த என் பாங்கனோடு எனக்கு உண்டாகிய நட்பு, இனி எடுக்கும் பிறப்பிலும் எனக்குத் தொடர்ந்து உறுவது ஆகுக]
133
பாங்கிமதி உடன்பாட்டு் வகை
506 முன்னுற வுணர்தல் குறையுற உணர்தல்
இருவரும் உள்வழி அவன்வர உணர்தல்என்று
ஒருமூன்று என்ப தோழிக்கு உணர்ச்சி.
இது நிறுத்த முறையானே மதிஉடன்பாட்டின் வகை இத்துணைத்து என்கின்றது.
இ-ள் முன்னுற வுணர்தலும் குறையுற உணர்தலும் இருவரும் உள்வழி அவள்வர உணர்தலும் என மூன்று வகையாம், மேல் கூறிப்போந்த பாங்கிமதி உடன்பாடு என்றவாறு. 134
[முன்னுற உணர்தல் - முற்படத் தோழி ஆராய்ந்து அறிதல்; முன்உறவு உணர்தல் - முன்னர், தலைவிக்குத் தலைவனிடை உறவு ஏற்பட்டவாற்றை ஆராய்ந்து அறிதல். குறையுற உணர்தல்-தலைவன் தன்மாட்டு ஒருகுறை கருதி வந்தவழி அவன் உளக்கருத்தை அறிதல். இருவரும் உள்வழி அவன்வர உணர்தல்- தலைவியும் தோழியும் சேர்ந்து இருந்தவிடத்துத் தலைவன் வர, நிகழ்ச்சியைத் தோழி உணர்தல்.
முன்னுறவுணர்தல் - இருவகையாகப் பிரித்துப் பொருள் கொள்ளப்படுவது நோக்குக.
43
|
|
|
|