ஊர்பெயர் கெடுதியோடு ஒழிந்தவும் வினாவுழி
யாரே இவர்மனத்து எண்ணம் யாதுஎனத்
தேர்தலும்4 எண்ணம் தெளிதலும்5 ஆங்குஅவன்
இருவரும் உள்வழி ஒருமையின் போந்து
கையுறை ஏந்திநின்று அவ்வகை வினாவுழி
எதிர்மொழி கொடுத்தலும்6 இறைவனை நகுதலும்7
மதியினில் அவர்அவர் மனக்கருத்து உணர்வும்8 என்று
ஈங்கனம் இயம்பிய இருநான்கு கிளவியும்
பாங்கி மதியுடன் பாட்டது விரியே.
இது மதிஉடன்பாட்டின்விரி இத்துணைத்து என்கின்றது.
இ-ள் நாற்றம் முதலாகப் பயில்வு ஈறாகச் சொல்லப்பட்ட முன்னுறு புணர்ச்சியை உள்ளுறுத்து வரூஉம் இத்திறம் ஏழானும் "எம் பெருமாட்டிக்குப் பண்டைத்தன்மை அன்றால்; இவ்வேறுபாடு எற்றினான் ஆயிற்று?" எனத்தோழி தன் உள்ளத்துள்ளே ஐயமுற்று ஆராய்தலும், அவற்றானே ஐயம் தீர்ந்து புணர்ச்சி உண்டு என்பதனைத் தெளிதலும், அங்ஙனம் தெளிந்தபின் அல்லது தலைவிமாட்டுச் சொல் நிகழ்த்தாள் ஆதலின், அவ்வாறு தெளிந்த பின்னர்த்தோழி தலைவியுடன் ஆராயுங்கால், தன்மனத்து நிகழ்ந்தனவற்றை மறைத்துக் கூற வேண்டுதலின், மெய்யினானும் பொய்யினானும் குற்றேவல் தப்பாமல் பலவாய் வேறுபட்ட இருபொருள்பட்ட சொற்களைக் கூற அவ்வாற்றான் ஆராய்தலும்,
இயற்கைப்புணர்ச்சிப் பின்னர்ப் பேணப்பட்ட தோழியாகிய வாயிலைப் பெற்றுப் பின்னர் இரந்து குறையுறுதலை வலியுறுத்த தலைவன் கண்ணியும் தழையும் ஏந்திச் செவ்வி பார்த்துச் சார்ந்து ஊரும் பெயரும் வேழம் முதலிய கெடுதியும் வழி முதலிய ஒழிந்தனவும் ஆகியவற்றை "இவன் என்னின் ஆயது ஒரு குறையுடையன்" என்று அவள் கருதுமாறு
|
|
|
|