பக்கம் எண் :

 34                            இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     தூதுமுனிவு இன்மை துஞ்சிச் சேர்தல்
     காதல் கைம்மிகல் கட்டுரை யின்மை
     ஆயிரு நான்கே அழிவில் கூட்டம்.                           271

     தெய்வம் அஞ்சல் புரைஅறம் தெளிதல்
     இல்லது காய்தல் உள்ளது உவர்த்தல்
     புணர்ந்துழி உண்மை பொழுதுமறுப்பு ஆக்கம்
     அருள்மிக உடைமை அன்புதொக நிற்றல்
     பிரிவுஆற் றாமை மறைந்தவை உரைத்தல்
     புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇச்
     சிறந்த பத்தும் செப்பிய பொருளே.                தொல். பொ. 272

     நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
     வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
     இன்புறல் ஏழைமை மறப்போடு ஒப்புமை
     என்றுஇவை இன்மை என்மனார் புலவர்                       274


-----------------------------