[வானை அடைந்து உச்சியில் உள்ள மதி தங்கும் மலைச்சாரலில் அருவிபாயும் வெற்பனே! நாங்கள் உடுக்கும் கலையை (ஆடையை) அன்றிப் பிறர் இப்புனத்தருகே கெடுத்த கலையை (மானை) அறியோம். உன் அறிவினால் இனித்தொடுக்கும் வினாக்கள் உளவேல் சொல்லுக.]
இறைவனை நகுதல்:
"மின்னே தழைகொண்டு வேழம்எய் தார்அந்த வேழம்வந்து பின்னே இணைபிரி யும்பிணை யானது பேசில்இன்னம் கொன்னே உகளும் குறுமுயல் ஆகவும் கூடும்கொல்லோ என்னே உலகில் இவரைஒப் பார்இல்லை ஏவினுக்கே".
அம்பி. 92
எனவும்,
[தலைவியே! கையில் தழையைக்கொண்டு இவர் யானையை எய்தார். அந்த யானை பின் இணையைப் பிரிந்த