பக்கம் எண் :

 366                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     தலைவி அருமை சாற்றலும்6 தலைவன்
     இன்றியமை யாமை இயம்பலும்7 பாங்கி
     நின்குறை நீயே சென்றுஉரை என்றலும்8
     பாங்கியைத் தலைவன் பழித்தலும்9 பாங்கி
     பேதைமை ஊட்டலும்10 காதலன் தலைவி
     மூதறி வுடைமை மொழிதலும்11 பாங்கி
     முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறலும்12
     தன்நிலை தலைவன் சாற்றலும்13 பாங்கி
     உலகியல் உரைத்தலும்14 தலைவன் மறுத்தலும்15
     பாங்கி அஞ்சிஅச் சுறுத்தலும்16 ஆங்குஅவன
     கையுறை புகழ்தலும்17 தையல் மறுத்தலும்18
     ஆற்றா நெஞ்சினோடு அவன்புலத்தலும்19 அவள்
     ஆற்றுவித்து அகற்றலும்20 ஆகும்நா லைந்தும்;
     இரந்துகுறை பெறாது வருந்திய கிழவோன்
     மடலே பொருள்என மதித்தலும்21 பாங்கிக்கு
     உலகின் மேல்வைத்து உரைத்தலும்22 அதனைத்
     தன்மேல் வைத்துச் சாற்றலும்23 பாங்கி
     தலைமகள் அவயவத்து அருமை சாற்றலும்24
     தலைமகன் தன்னைத் தானே புகழ்தலும்25
     அலர்முலைப் பாங்கி அருள்இயல் கிளத்தலும்26
     கொண்டுநிலை கூறலும்27 என்றுஇவை ஏழும்;
     தலைவி இளமைத் தன்மை பாங்கி
     தலைவற்கு உணர்த்தலும்28 தலைவன் தலைவி
     வருத்திய வண்ணம் உரைத்தலும்29 பாங்கி
     செவ்வி அருமை செப்பலும்30 தலைவன்
     செவ்வி எளிமை செப்பலும்31 பாங்கி
     என்னை மறைப்பின் எளிதுஎன நகுதலும்32
     அந்நகை பொறாஅது அவன்புலம் பலும்33 அவள்
     தேற்றலும்34 கையுறை ஏற்றலும்35 கிழவோன்
     ஆற்றலும்36 என்னும் அவ்வொன் பானும்;
     இறைவன் தனக்குக் குறைநேர் பாங்கி