பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா-137                              369


 

 10  தலைவியின் அறியாமையை மனம் கொள்ளும்படி பாங்கி
     தலைவனுக்குக் கூறுதல்.
 11  தலைவி முதிர்ந்த அறிவு உடையவள் என்பதைத் தலைவன்
     பாங்கிக்குச் சொல்லுதல்.

 12  முன்னமே தலைவனுக்குத் தலைவிபால் அமைந்திருந்த நட்பை
     அவனுக்குப் பாங்கி கூறல்.

 13  தலைவன் தன் நிலைமையைத் தோழிக்குக் கூறுதல்.

 14  ஒரு மங்கையை ஒரு தலைவன் மணம் செய்துகொள்வது தான்
     முறை என்று தலைவனுக்குப் பாங்கி சொல்லுதல். (உலகியல்-ஆன்றோர்
     ஒழுக்கம்.)
 15  "நீ தலைவியை மணந்து கொள்" என்று பாங்கி கூறியதைத்
     தலைவன் மறுத்தல்.

 16  தலைவன் செயலுக்கு அஞ்சிப் பாங்கி தலைவனை அச்சுறுத்தல்.

 17  தலைவன் தான்கொணர்ந்த கையுறைப் பொருளைப் புகழ்தல்.
     (கையுறை-தலைவியின் கையில் சேர்த்தற்கு உரியது.)

 18  பாங்கி கையுறையை ஏற்றுக்கோடற்கு மறுத்தல்.

 19  பாங்கி மறுத்தலைப் பொறாத நெஞ்சுடையவனாகித் தலைவன்
     வெறுத்துக் கூறுதல்.

 20  தோழி தலைவன் துயரத்தை ஆறச்செய்து அவனை நீக்குதல்.

 21  தோழியை இரந்து வேண்டியும் தன் காரியம் கைகூடப் பெறாத
     தலைவன் மடல் ஏறுதலே தான் செய்யத்தக்க பொருள் என்று
     தீர்மானித்தல்.

 22  "ஒருவன், முன் நட்பு உடைய தலைவியைத் தான் பெறாவிடின்
      மடல்மா ஊர்ந்து சென்று பெறுவது உலக வழக்கம்" என்று தலைவன்
      பாங்கிக்குக் கூறுதல்.

        47