பக்கம் எண் :

 370                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 23  அம்மடல் ஊர்தலைத் தான் செய்வதாகத் தலைவன் பாங்கிக்குச்
     சொல்லுதல்.

 24  தலைமகளுடைய அவயவங்கள் படத்தில் எழுதுதற்கு அரியன
     என்பதைப் பாங்கி தலைவனுக்குச் சொல்லுதல்.

 25  தலைவன் தன் ஆற்றலைத் தானே புகழ்ந்து கூறுதல்.

 26  "மடலின் பொருட்டுப் பனையை நீ வெட்டினால் அதன் மேல்
     உள்ள பறவைகள் துன்புறும். அப்பறவைகளின் முட்டைகள் உடையும்
     ஆதலால் அச்செயல் அருள் உடையார் இயல்புக்கு மாறாகும்" என்று
     பாங்கி தலைவனுக்குக் கூறுதல்.

 27  தலைவன் குறையை உட்கொண்டு தான் உதவிசெய்ய நிற்றலைப்
     பாங்கி அவனுக்குக் கூறுதல். (நிலை-உடன் பட்டு நிற்றல்.)

 28  தலைவியினுடைய பேதைமை பற்றிப் பாங்கி தலைவனிடம் கூறுதல்.

 29  பார்வை முதலியவற்றால் தன்னை வருத்திய தலைவி மங்கைப்
     பருவத்தினள் என்று தலைவன் கூறுதல்.

 30  தலைவியைப் பார்ப்பதற்கு உரிய காலம் பெறுதற்கு அரியது
     என்பதைப் பாங்கி தலைவற்குக் கூறுதல்.

 31  "என் பெயரைக் கேட்கும் அளவிலேயே தலைவி செவ்வி எளியள்
     ஆவள்" என்பதைத் தலைவன் பாங்கிக்குக் கூறுதல்.

 32  "தலைவிக்கு இன்றியமையாத என்னை மறைத்தபிறகு தலைவியைப்
     பெறுதல் உமக்கு எளிது" என்று பாங்கி தலைவனைப் பரிகசித்தல்.

 33  அவளது எள்ளல்சிரிப்பைப் பொறாது தலைவன் வருந்துதல்.