பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா-137                              371


 

     34  பாங்கி தலைவனுக்கு ஆறுதல்மொழி கூறுதல்.
     35  பாங்கி தலைவன் கொணர்ந்த கையுறையை ஏற்றுக் கொள்ளுதல்.
     36  தலைவன் தன்துயரைத் தணித்துக் கொள்ளுதல்.
     37  பாங்கி தலைவிக்குத் தலைவனுடைய குறையை அறிவித்தல்.
     38 தலைவி தலைவனை முன்பு அறியாதவள் போன்று.பாங்கி
 கூறியவற்றை உட்கொள்ளாதவள்போல் காட்டி, அவளை நோக்கி வேறு
 செய்தியைக் குறிப்பால் கூறுதல்.
     39  தலைவனைத் தான் கண்டமையைப் பாங்கி தலைவிக்குச்
 சொல்லுதல்.
     40  தலைவி பாங்கியை மறைத்து நாணத்தால் ஒன்றும்
 சொல்லாதிருத்தல்.
     41  பாங்கி  "என்னை நீ மறைப்பது ஏன் " என்று தலைவியைத்
 தழுவிக் கொள்ளுதல்.
     42  பாங்கி தலைவன் கொடுத்த கையுறையைப் புகழ்தல்.
     43  தலைவியைப் பெறாத தலைவன் வருந்துதலைத் தோழி
 குறிப்பிடுதல்.
     44  தலைவி தலைவனுக்கு உடன்படாமல் இருத்தல் அருமை
 என்பதனைத் தலைவிக்குப் பாங்கி கூறுதல்.
     45  பாங்கி, தலைவன் மடல்ஏறுதலைத் துணிந்த செய்தியைத்
 தலைவியிடம் குறிப்பிடுதல்.
     46  விடை கூறாதிருந்த தலைவியைப் பாங்கி சினந்து கூறுதல்..