பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                               39


 

     பெரும்பாலும் மருதநிலத்து வாழ்வாராகிய அந்தணர் அரசர் வணிகர்
 வேளாளர் என்ற நாற்குலத்தினர் ஆவர். இவரேயன்றிக் குறிஞ்சி முதலிய
 ஐவகை நிலத்தில் வாழும் பொருப்பன், விடலை, குறும்பொறை நாடன்,
 ஊரன், சேர்ப்பன் முதலாகிய தலைமக்களும் கைக்கிளைக்குச் சிறுபான்மை
 உரியராவர்.

     இயற்கைப் புணர்ச்சி தெய்வத்தாலும் தலைவியாலும் நிகழும். அது
 தெய்வத்தான் முடியும் வழி, முயற்சியின்றி முடிவதாகும். உள்ளத்தால்
 புணரும் புணர்ச்சியும், மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சியும் களவுக்காலத்தில்
 தலைவனுக்கும் தலைவிக்கும் உரியனவாம். தலைவனுக்குப் பெருமையும்
 உரனும் தலைவிக்கு அச்சமும் நாணும் மடனும் நிலைபெற்ற குணங்கள்
 ஆதலின், உள்ளப்புணர்ச்சியே முதற்கண் உரியது ஆகும். காட்சி-வேட்கை-
 உள்ளுதல்-மெலிதல்-ஆக்கம் செப்பல்-நாணுவரை இறைத்தல்-நோக்குவ
 எல்லாம் அவையே போறல்-மறத்தல்-மயக்கம்-சாக்காடு துணிதல்-என்ற
 பத்து அவத்தைகளையும் தலைமகனும், காட்சி-வேட்கை-உள்ளுதல் என்ற
 மூன்று அவத்தைகளுக்கும் உரிய புகுமுகம் புரிதல்-பொறிநுதல் வியர்த்தல்-
 நகுநயம் மறைத்தல்-சிதைவு பிறர்க்கு இன்மை-கூழை விரித்தல்-காது ஒன்று
 களைதல்-ஊழ் அணி தைவரல் - உடை பெயர்த்து உடுத்தல்-அல்குல்
 தைவரல்-அணிந்தவை-திருத்தல்- இல்வலி உறுத்தல்- இருகையும் எடுத்தல்-
 என்ற பன்னிரண்டு மெய்ப்பாடுகளையும் தலைவியும் பொருந்தின், மெய்யுறு
 புணர்ச்சி நிகழும். தலைவனும் தலைவியும் புணர்ச்சி நிகழ்த்தும் இடங்கள்,
 பகற்குறி இரவுக்குறி என்ற இருவகையினவாம். அவற்றுள், பகற்குறி வீட்டு
 எல்லையைக் கடந்தது; இரவுக்குறி வீட்டு எல்லையைக் கடவாததாகும்.
 களவுக்காலத்துப பிரிவுகள் ஒருவழித்தணத்தல், வரைவு  இடைவைத்துப்
 பொருள்வயின் பிரிதல் என்ற