பக்கம் எண் :

 40                            இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     இருவகையினவாம். அவற்றுள், ஒருவழித்தணத்தல் காலவரையறை
 உடையது அன்று; வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதல்இரண்டு
 திங்கள் எல்லைக்கு உட்பட்டது.

     திருமணம், களவு வெளிப்படாமுன் வரைதல் களவு வெளிப்பட்டபின்
 வரைதல் என்று இருவகைப்படும். இயற்கைப் புணர்ச்சி முதலிய நான்கனுள்
 தலைவன் தானே தலைவியை மணத்தல் வேண்டும் என்று மனம் தெளிந்து
 மணத்தலும், பாங்கனாலாவது பாங்கியாலாவது மனம் தெளிவிக்கப்பட்டுத்
 தலைவியை மணத்தலும் களவு வெளிப்படாமுன் வரைதலாகும். உடன்போய்
 மணத்தலும், உடன்போய் மீண்டு வந்து மணத்தலும், உடன்போக்கு இடையீடு
 பட்டுப் பின் மணத்தலும் களவு வெளிப்பட்ட பின் மணத்தலாகும்.
 அவற்றுள், உடன்போய் மணத்தல் ஒரே வகைப்படும். தலைவியினுடைய
 வீட்டில் மணம்செய்துகோடலும், தலைவனுடைய வீட்டில் மணம்செய்து
 கோடலும் என்று உடன் போய் மீண்டு வரைதல் இருவகைப்படும். தலைவன்
 இரவுக்குறிக்கண் வரும் வழியை அஞ்சினாலும், தலைவன் தலைவியை
 மணத்தலைத் தலைவிதமர் மறுத்தாலும், வேற்றவன் ஒருவனுக்குத்
 தலைவியை அவள்தமர் மணம்செய்துகோடலைக் குறித்தாலும், தலைவிக்குத்
 தலைவனைக் காணாத வகையில் காவல் மிகுந்தாலும் முறைப்படி அறத்தொடு
 நிலை நிகழும். தலைவி பாங்கிக்கும், பாங்கி செவிலிக்கும், செவிலி
 நற்றாய்க்கும், நற்றாய் தந்தை தன்னையருக்கும் முறைப்படி அறத்தொடு
 நிற்பர். பாங்கியிற் கூட்டம் ஆகிய ஒன்று நீங்கிய ஏனை இயற்கைப்
 புணர்ச்சி முதலிய மூன்று புணர்ச்சிக்கண்ணும் தலைவன் ஒருவழித் தணந்து
 போனாலும், தோழியிற் புணர்ச்சி முதலியவற்றின் பின் தலைவன் வரைவு
 இடைவைத்துப் பொருள்வயின் பிரி்ந்தாலும், தலைவனைச் செவிலி இரவுக்
 குறியிடைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டாலும் அவை காரணமாகவும் தன்னை
 இற்செறித்தாலும் தலைவிக்கு