பாங்கி தலைவியைப் பாங்கிற் கூட்டல்:
"அறுகால் நிறைமலர் ஐம்பால் நிறைஅணிந் தேன்அணிஆர்
துறுகான்மலர்த்தொத்துத் தோகைதொல் ஆயம்மெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்குஅரி யோன்புலி யூர்அன்ன ஒண்ணுதலே."
[என் தலையில்தான் வைத்த திருவடி பிறருக்கு மிகஅரியவனாகிய சிவபெருமானுடைய புலியூரை ஒத்த தலைவியே! மயிலனையாய்! வண்டுகள் நிறைந்த மலர்களை அணிந்த உன் கூந்தலில் நறுமணம் மிக்க இப்பூங் கொத்துக்களையும் செருகியுள்ளேன். உன் சிறிய இடை வருந்தாதபடி மெல்லத் தோழியர் கூட்டத்தை அடைவாயாக]
பாங்கி தலைவியை நீங்கி ஓம்படை சாற்றல்:
"பெடைநின்று காண உடன்நின்ற தோகை பெருநடம்செய்
புடைநின்ற சோலைப் பொதியின்வெற் பாபொற்குழைதொடரும்
கடைநின்று உகுபுனல் கண்ணிக்கும் நின்புவி காவலுக்கும்
இடைநின்ற பாவிக்கும் ஏதம் உறாவண்ணம் எண்ணுகவே
[பெண்மயில் காண ஆண்மயில் நடஞ்செய்யும் சோலைகளை உடைய பொதியமலைத் தலைவனே! உன்னையே நினைத்துக் கண்ணீர்விடும் தலைவிக்கும், நிலஉலகைக் காக்கும் உன் காவலுக்கும், உங்களுக்கு இடையே நட்புறவை வளர்த்து நிற்கும் எனக்கும் தீங்கு நேராதபடி நடந்துகொள்வாயாக.]
"தழங்கும் அருவிஎம் சீறூர் பெரும இதுமதுவும்
கிழங்கும் அருந்தி இருந்துஎம்மொடு இன்று கிளர்ந்துகுன்றர் |
|
|
|