பெறுதலின், இவற்றையும் அவற்றோடு தலைப்பெய்து இவ்வறு பத்தொன்றும் பாங்கியிற்கூட்டத்து விரி என ஒருங்கு தொகுத்து ஓதினார்.
அற்றேல், ஆசிரியர் தொல்காப்பியனார் தலைவன்கூற்றும் தலைவி கூற்றும் பாங்கிகூற்றும் தனித்தனி எடுத்து ஓதுப ஆதலின், இவர் பாங்கி கூற்றோடு ஏனை இருதிறத்தோர் கூற்றையும் விரவித்தொகுத்து ஓதியது மாறுகொளக் கூறலாம் பிறஎனின், ஆகாது; இது புடைநூல் ஆகலின் என்க. இவ்வாறு வந்துழி எல்லாம் இக்கடாவிடைகளை மத்திமதீபமாக்கி, முன்னும் பின்னும் உய்த்து உரைத்துக் கொள்க.
தலைமகன் உட்கோள் சாற்றல் முதலாகப் பாங்கி ஆற்றுவித்து அகற்றல் ஈறாகச் சொல்லப்பட்ட இருபதனுள் தலைவன் கூற்றாயின எல்லாம் இரந்து பின்நிற்றற்கும், தோழி கூற்றாயின எல்லாம் சேட்படுத்தற்கும்,
இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருள் என மதித்தல் முதலாகக் கொண்டுநிலைகூறல் ஈறாகச் சொல்லப்பட்ட ஏழனுள் தலைவன் கூற்றாயின எல்லாம் மடல் கூற்றிற்கும், தோழி கூற்றாயின எல்லாம் மடல் விலக்கிற்கும்,
தலைவி இளமைத்தன்மை பாங்கி தலைவற்கு உணர்த்தல் முதலாகக் கிழவோன் ஆற்றல் ஈறாகச் சொல்லப்பட்ட ஒன்பதனுள் தோழிகூற்றாயின எல்லாம் உடன்படற்கும், தலைவன் கூற்று ஆயின எல்லாம் மடல்கூற்று ஒழிதற்கும்,
இறைவன் தனக்குக் குறை நேர் பாங்கி இறைவிக்கு அவன் குறை உணர்த்தல் முதலாகப் பாங்கி கையுறை புகழ்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறனுள் பாங்கி கூற்றாயின எல்லாம் மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தற்கும், தலைவிகூற்று ஆயின எல்லாம் வலிதாகச் சொல்லி மறுத்தற்கும்,
52 |
|
|
|