[1 அந்திப்பொழுது கண்டு தலைவி ஆற்றாது வருந்துதல்.
2 "தலைவியின் செயலால் களவு வெளிப்பட்டு விடுமோ?" என்று பாங்கி
வருந்துதல்.
3 தலைவன் வரக் காலம் தாழ்க்கவே, தலைவி வருந்துதல்.
4 தலைவியைப் பாங்கி இடித்து உரைத்தல்.
5 பாங்கி தன் முன்னே நிற்கவும் அவள்மேல் உள்ள வெறுப்பால்
தலைவி அவளை நோக்கிக் கூறாமல் அவளுக்குப் புறமாக மொழிந்து
அவளுக்கு அறிவுறுத்தல்.
6 பின் தலைவி பாங்கியிடம் நேராக உரையாடுதல்.
7 தலைவியை நோக்கிப் பாங்கி "களவு வெளிப்படும்" என்று அச்சம்
உறச்செய்தல்.
8 "தலைவனைப் பிரிந்திருத்தல் இயலாத செயலாய் உள்ளதே"
என்பதனை நினைத்துத் தலைவி வருந்துதல்.