சாயின் அல்லது பிறிதுஎவன் உடைத்தே
யாமைப் பார்ப்பின் அன்ன
காமம் காதலர் கையற விடினே."
[தாய்முகம் நோக்கி வளரும் தன்மையை உடைய ஆமையின் பார்ப்பைப் போலத் தலைவரைப் பல்கால் காண்டலால் வளரும் தன்மையை உடைய காமமானது, காதலர் நாம் செயலறும்படி நம்மைப் பிரிந்து கைவிட்டால் தாய் இல்லாத முட்டை கிடந்தபடியே அழிவதுபோல, உள்ளத்துள்ளே கிடந்து மெலியின்அன்றி வேறு என்ன உறுதியை உடையது? என்னை இடித்துக் கூறுவோர் இதனைச் சிறிதும் அறிகிலர்.]
தலைவி பாங்கியொடு பகர்தற்குச் செய்யுள்:
"நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி
கட்குஇன் புதுமலர் முள்பயந் தாஅங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே".
[தோழி! மனைக் கொல்லையில் நெருங்கி முளைத்த நெருஞ்சிப்பூ கட்கு இனிதாகத்தோன்றிப் பின் துயர்தரும் முள்ளைப் பயந்தாற்போலத் தோற்றத்தில் இனியராகிய நம் காதலர் தம் செயலால் துயரம் தருதலால் என்நெஞ்சு நோவா நின்றது.]
தலைவியைப் பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்:
"மனம்கா வலருழை வைத்துமென் கூர்வளை வாய்ப்பசும்புள்
இனம்காவல் மாற்றிய ஏனல்கண் டால்அன்னை எப்படியும் |
|
|
|