நாவல ரேபெற நல்கும்கை மேகம் நறுங்குவளை
மாஅலர் ஏய்தொடையான் தஞ்சை வாணன் வரையில்வந்தே".
[அம்பையும் பூவையும் ஒத்த விழியையும் மாந்தளிர் மேனியினையும்
உடைய இவர்கள் இனித் தினைப்புனம் காவற்கு வாரார். யானைகளையும் பொன்னையும் புலவருக்கு நல்கும் கார்மேகக் கொடைக் கைகளையுடைய மலர்மாலை அணிந்த தொண்டைமானாகும் தஞ்சைவாணன் வரையில் வந்து, நாம் நம் மனத்தை அடக்கிக்கொண்டு இருக்க வேண்டியவர் ஆயினோமே.]
இவற்றுள், கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம் பொழுது கண்டு இரங்கலும், பாங்கி புலம்பலும், தலைவன் நீடத்தலைவி வருந்தலும், முன்னிலைப்புறமொழி மொழிதலும், பாங்கியொடு பகர்தலும், நீங்கற்கு அருமை தலைவி நினைந்து இரங்கலும், கிழவோன் தஞ்சம்பெறாது நெஞ்சொடு கிளத்தலும் ஆகிய ஏழும் இரங்கற்கும்,
இவற்றுள், கிழவோன் தஞ்சம்பெறாது நெஞ்சொடு கிளத்தல் ஒழித்து ஏனைய ஆறும் வரைதல் வேட்கைக்கும்,
தலைவியைப் பாங்கி கழறலும், தலைவியைப் பாங்கி அஞ்சி அச்சுறுத்தலும், தலைவிக்கு அவன் வரல் பாங்கி சாற்றலும் ஆகிய மூன்றும வன்புறைக்கும்,
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறுத்தலும், முன்னிலைப் புறமொழி மொழிந்து அறிவுறுத்தலும், முன்நின்று உணர்த்தலும், முன்நின்று உணர்த்தி ஓம்படை சாற்றலும் ஆகிய நான்கும் இற்செறிப்பு உணர்த்தற்கும் உரிய எனக்கொள்க; வரைவு கடாதற்கும் ஆம். 141
|
|
|
|