பக்கம் எண் :

 424                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     நெடுந்தகை குறிவயின் நீடுசென்று இரங்கலும்5
     வறுங்களம் நாடி மறுகலும்6 குறுந்தொடி
     வாழும்ஊர் நோக்கி மதிமயங் கலும்7 எனும்
     ஏழும் பகற்குறி இடையீட்டு விரியே."

     இது பகற்குறி இடையீட்டுவிரி இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல் முதலாகக் குறுந்தொடி
 வாழும் ஊர்நோக்கி  மதிமயங்கல் ஈறாகச் சொல்லப்பட்ட ஏழும் பகற்குறி
  இடையீட்டு விரியாம் என்றவாறு.

விளக்கம்  

 1 தலைவனைத் தோழி குறித்த இடத்திற்கு வருவதைத் தடுத்தல்.

 2 தலைவியும் குறியிடத்திற்கு வாராதவாறு தோழி தடுத்தல்.

 3 தலைவி தலைவனோடு விளையாடும் இடங்களைப் பார்த்து மனம்
   இரங்குதல்.

 4 விளையாடும் இடங்களைவிட்டுத் தலைவியை நீக்கிக் கொண்டு பாங்கி
   வீட்டிற்குச் செல்லுதல்.

 5 மறுநாள் தலைவன் குறியிடத்து வந்து நீண்டநேரம் தங்கித்
   தலைவியைக்கண்டு  அளவளாவும் வாய்ப்பினை இழந்தமைக்கு மனம்
   இரங்குதல்.

 6 தலைவி இல்லாத இடத்தைக்கண்டு மனம் சோருதல்.

 7 தலைவி வாழும் ஊரை நோக்கித் தலைவன் மதி மயங்கிக் கூறுதல்.

ஒத்த நூற்பாக்கள்  

   முழுதும் -                                          ந. அ. 156