அந்தணருக்கும் அரசருக்கும் தூதுபோதல்தொழில் உரியதாகும்.
அரசனால் சிறப்புப்பெயர் பெறின், வணிகருக்கும் வேளாளருக்கும் கூட
அவ்வுரிமை வழங்கப்பெறும்.
அரசருக்குப் பகை வந்தவிடத்துப் பிரிதல், அந்தணர் அல்லாத மூன்று
வருணத்தாருக்கும் உரித்து.
பரத்தையிற்பிரிவும் பொருள்வயிற்பிரிவும் நான்கு வருணத்தாருக்கும்
உரிய. வேதம்ஓதல், நாடுகாவல், தூது போதல் இம்மூன்றும் நீங்கலான
ஏனைய பிரிவுகள் குறிஞ்சி முதலிய ஐவகை நிலத்துத் தலைமக்களுக்கும்
உரிய.
கல்வி முதலிய ஐவகைப் பிரிவுகளிலும் பிரிந்து செல்லும் தலைவன்,
தலைவியிடமும் தோழியிடமும் சொல்லிச் செல்லுதலும் உண்டு; பிரிவு
குறித்துத் தலைவி ஆற்றாளாவள் என்று, அவளிடம் சொல்லாது பிரியினும்
பாங்கியிடம் கூறியே பிரிவான். பின், பாங்கி, தலைவிக்கு அவன் பிரிவைக்
குறிப்பால் உணர்த்துவாள். பிரிவின்போது காலால் நடந்துசேறல் கப்பலில்
சேறல், ஏனைய ஊர்திகளில் சேறல் என்ற முத்திறமும் நிகழும். அறிவான்
மிக்க அந்தணருக்கு, நாடோறும் நிகழ்த்தும் இறைவழிபாட்டுச் சடங்கு
களுக்கு முட்டுப்பாடு நிகழும் ஆதலின், கப்பலில்செல்லுதல் நீக்கப்பட்டது
ஏனைய வருணத்தார்களுக்கும் குலமகளிரை அழைத்துக்கொண்டு கப்பலில்
பயணம் செய்தலும், பாசறைக்கண் தங்கியிருத்தலும் தக்கன அல்ல என்று
கடியப்பட்டன. ஓதற்பிரிவு முதலிய ஐந்தன்கண்ணும் பிரிவினுக்குத் திட்டம்
இட்ட தலைவன் மனம் இரங்குதலையும் உடையனாவான். தலைவியையும்
தன் மனத்தையும் அமைதிஉறச் செய்வதற்கு வீட்டின்கண் இரங்குதலும், தன்
மனத்தை அமைதியுறச் செய்வதற்கு