பக்கம் எண் :

 430                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தலும்8
     நேரிழை பாங்கியொடு நேர்ந்துஉரைத் தலும்9 அவள்
     நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்கு உரைத்தலும்10
     குறியிடை நிறீஇத் தாய்துயில் அறிதலும்11
     இறைவிக்கு இறைவன் வரவுஅறி வுறுத்தலும்12
     அவள்கொண்டு சேறலும்13 குறிஉய்த்து அகறலும்14
     வண்டுஉறை தாரோன் வந்துஎதிர்ப் படுதலும்15
     பெருயகள் ஆற்றினது அருமைநினைந்து இரங்கலும்16
     புரவலன் தேற்றலும்17 புணர்தலும்18 புகழ்தலும்19
     இறைமகள் இறைவனைக் குறிவிலக்கலும்20 அவன்
     இறைவியை இல்வயின் விடுத்தலும்21 இறைவியை
     எய்திப் பாங்கி கையுறை காட்டலும்22
     இல்கொண்டு ஏகலும்23 பின்சென்று இறைவனை
     வரவு விலக்கலும்24 பெருமகன் மயங்கலும்25
     தோழி தலைமகள் துயர்கிளந்து விடுத்தலும்26
     திருமகள் புணர்ந்தவன் சேறலும்27 என்றுஆங்கு
     இருபத் தேழும் இரவுக் குறியே.

     இஃது இரவுக்குறிவிரி இத்துணைப் பகுதித்து என்கின்றது.

     இ-ள் இறையோன் இருட்குறி வேண்டல் முதலாகத் திருமகள்
 புணர்ந்தவன் சேறல் ஈறாகச்   சொல்லப்பட்ட இருபத்தேழும்
 இரவுக்குறிவிரியாம் என்றவாறு.

விளக்கம்   

 1 தலைவன் தோழியிடம் இரவுக்குறி வேண்டுதல்.

 2 தோழி அவன் வரும்வழி அரிதாய் இருத்தலைக் குறிப்பிடுதல்.

 3 தலைவன் தனக்கு வழி எளிதாய் இருத்தலைக் கூறுதல்.

 4 தலைவனுடைய நாட்டிலுள்ள மகளிர் அணியும்
   அணிகலன்களையும் அவர்களுடைய   இயலையும் பற்றித் தோழி
   தலைவனை வினாவுதல்.