இடைச்சுரத்தின்கண் இரங்குதலும் தலைவற்கு நிகழும். தலைவியின்
மனம் சுழலுதலையும் தன்மனம் சுழலுதலையும் நீக்குவதற்காகத் தலைவன்
அழுங்குவானேயன்றித் தான் மேற்கொண்ட செயற்கண் செல்லுதலை
அடியோடு நீக்கமாட்டான். ஓதற்குப் பிரியும் பிரிவு மூன்று ஆண்டுக்கால
வரையறை உடையது. தூது, துணை, பொருள் என்ற இவை காரணமாகப்
பிரியும் பிரிவு ஓர்ஆண்டு என்னும் காலவரையறை உடையது. தலைவி
பூப்பெய்தி முந்நாள் கழித்து, நீராடியபின், அடுத்த பன்னிரண்டு நாள்களும்
அவள் வயிற்றில் கருத்தரிக்கும் காலம் ஆதலின், பரத்தையரைக் குறித்துப்
பிரியும் தலைமகன் அப்பன்னிருநாள்களும் தலைவியைப் பிரியான். ஓதற்குப்
பிரிந்த தலைவன் இடையே ஓதலைவிடுத்து ஊருக்குத் திரும்பி வருதலையும்,
ஓதற்கு அகன்ற இடத்தில் தனிமை குறித்து வருந்துதலையும் மேற்
கொள்ளான். தூது காரணமாகவும், பகைவயின் நண்பனுக்கு உதவுதல்
காரணமாகவும் பிரிந்த தலைமகன் தான் மேற்கொண்ட செயல், தான் மீண்டு
வருதற்குக் குறித்த காலவரையறையைக் கடந்து நீட்டிப்பின், மனம்
வெறுத்துப் பாசறைக்கண் தன் தனிமைத்துயர் பற்றி வருந்துதலும் உரியன்.
கற்புக்காலத்தில் தலைவி தான் பூப்பு எய்திய செயலைச் செவ்வணி
அணிவித்துத் தன்தோழியை அனுப்பிப் பரத்தையர் இல்லில் இருக்கும்
தலைவனுக்குத் தெரிவிப்பாள். உடனே தலைவன் தன் காமக்கிழத்தியை
விடுத்துத் தலைவி இல்லத்திற்குப் புறப்படவே, அவனைப் பற்றி இழிவாகப்
பேசும் காமக்கிழத்தியைத் தலைவி ஏசுவாள்; பரத்தைமை கொண்ட
தலைவனையும் கடிந்து உரைப்பாள்; தலைவன் பின்னும் ஒருத்தியை மணந்து
கொள்வான் ஆயின், அப்பின்முறைக் கிழத்தியைக் கணவனோடு மகிழ்ந்து
எதிர்கொள்வாள்; அவளையும் தோழியரையும் தன்பக்கல் கொண்டு
பரத்தையைப் பழித்துக் கூறுவாள்; வீட்டினை விடுத்துக் கணவனோடு
ஊருக்கு வெளியே போய்ச் சோலைகளிலும், தோட்டங்களிலும், வரிசையான