பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா எண்-145                         449


 

     பாங்கி அவன் நாட்டு அணியியல் வினாதலும், அவற்குத் தன்நாட்டு
 அணியியல் சாற்றலும், நேரிழை பாங்கியொடு நேர்ந்து உரைத்தலும் ஆகிய
 மூன்றும் உடன்படற்கும்,

     தலைமகள் நேர்ந்தமை பாங்கி தலைமகற்கு உணர்த்தலும், குறியிடை
 நிறீஇத தாய்துயில் அறிதலும், இறைவிக்கு இறைவன் வரவு அறிவுறுத்தலும்,
 அவளைக்கொண்டு சேறலும் ஆகிய நான்கும் கூட்டற்கும்,

     தலைமகளை எதிர்ப்படுதலும், தேற்றலும், புணர்தலும் ஆகிய மூன்றும்
 கூடற்கும்,

     புகழ்தலும், கையுறை காட்டலும் ஆகிய இரண்டும் பாராட்டற்கும்,
 தலைமகன் இறைவியை இல்வயின் விடுத்தலும், பாங்கி் தலைமகளை
 இல்கொண்டு ஏகலும் ஆகிய் இரண்டும் பாங்கிற் கூட்டற்கும்,

     நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தலும், தலைமகள் ஆற்றினது
 அருமை நினைந்து இரங்கலும், பெருமகன் மயங்கலும், தோழி தலைமகள்
 துயர் கிளந்து விடுத்தலும் ஆகிய நான்கும் மயங்கற்கும்,

     பாங்கி குறி உய்த்தலும், திருமகட் புணர்ந்தவன் சேறலும் ஆகிய
 இரண்டும் நீங்கற்கும் உரியவாம் என்க.

     இவற்றுள் நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தலும், பெருமகள்
 ஆற்றினது அருமை நினைந்து இரங்கலும், இறைமகள் இறைவனைக்
 குறிவிலக்கலும் ஆகிய மூன்றும் வரைதல் வேட்கைக்கும், பாங்கி நெறியினது
 அருமை கூறலும், இறைவனை வரவு விலக்கலும், தலைமகள துயர்கிளந்து
 விடுத்தலும் ஆகியமூன்றும் வரைவு கடாதற்கும் உரியவாமாறு உணர்க.

145

     57