அழகிய வயல்களிலும், மலைகளிலும், கானகங்களிலும், அருவிக்
கரைகளிலும் விளையாடி மகிழ்வாள்; ஆறும் ஓடையும் குளமும்
ஆகியவற்றில் கணவனோடு நீராடி மகிழ்வாள். இங்ஙனம் பொதுவான
செய்திகள் கூறப்பட்டபின்னர், வாயில்கள் ஆகும் பாணன் முதலியோர்
தொழில்கள் முறையே கூறப்பெறுகின்றன. பின்னர் அவருள் சிலருடைய
இயல்புகள் விளக்கப்பெறுகின்றன.
பாணன் தொழில்களாவன - தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்த
காலைத் தலைவியை வாயில்வேண்டலும், வாயில் உடன்படச் செய்தலும்,
அவள் ஊடலைப் போக்குதலும், பிரிவிடைத் தலைவியது அழகு அழிவு
கண்டு இரங்கலும், தலைவன் பிரிந்துபோன இடத்திற்குச் சென்று அவனிடம்
தலைவிநிலைமையைக் கூறுதலும், தலைவன் மீண்டுவரும் நன்னாளைத்
தலைவிக்கு உணர்த்துதலும், பின்னர்த் தலைவன் வந்தபின் தலைவியின்
நலன் குறித்து வினவுதலும் போல்வனவாம்.
விறலியின் தொழில்களாவன - தலைவன் பிரிந்த இடத்துத்
தலைவியைத் தேற்றலும், தலைவியின் புலவியை நீக்கலும், அவளை வாயில்
வேண்டலும், வாயில் உடன்படச் செய்தலும் போல்வனவாம்.
கூத்தரின் தொழில்களாவன - தலைவனுடைய செல்வத்தை வாழ்த்து
தலும், இல்லறம் இனிது நடத்தற்குரிய வாய்ப்பினைக் கூறலும், அணிகலன்
களை அணியும் முறைமைகளை உணர்த்தலும், இன்பம் துய்க்கும்
வாய்ப்புக்களை விளக்கலும், தலைவியின் புலவியைக் காரணம் காட்டி
நீக்கலும், தலைவன் செல்லக் கருதிய தேயத்தின் சேய்மையைக் கூறலும்,
தலைவன் போர்மேற் சென்றகாலை அவனைப் பாசறையில் சென்று
காண்டலும், அவன் மீண்டு வரும் காலம் உணர்த்துதலும் போல்வன