பக்கம் எண் :

 452                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     இஃது இரவுக்குறி இடையீட்டுவிரி இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் இறைவிக்கு இகுளை இறைவரவு உணர்த்துழித் தான்குறி
 மருண்டமை தலைவி அவட்கு உரைத்தல் முதலாகக் கோழி குரல் காட்டல்
 ஈறாகக் கிடந்த கிளவி பதினெட்டும்     இரவுக்குறி இடையீட்டின் விரியாம்
 என்றவாறு.

     அநுவாதமுகத்தான், ஈண்டும் இறைவிக்கு இகுளை இறைவரவு
 உணர்த்துதல் வரப்பெறும்.

விளக்கம்  

     அநுவாதம்-முன் கூறிய ஒன்றனையே பின் ஒரு பயன் நோக்கிக்
 கூறிக்கோடல்.

 1 தலைவிக்குத் தோழி தலைவன் இரவுக்குறிக்கண் வந்துள்ள செய்தியை
   உணர்த்தியவழித்   தலைவி தான் மற்றொன்றைத் தலைவன் செய்த
   குறியாகக் கருதிச்சென்று அவனைக்   காணாது வருந்தி மீண்ட
   செய்தியைச் சொல்லுதல்.

 2 பாங்கி தலைவி பொருந்த அறிந்துகொள்ளமுடியாதபடி தலைவன்
   குறிப்புச் செய்த பொல்லாங்கை எடுத்துக் கூறுதல்.

 3 தலைவன் இரவுக்குறிக்கண் தலைவியைக் காணாது மனம் வாடி
   மீண்டு போதல்.

 4 பொழுது விடிந்தபின் தலைவி தலைவன் இல்லாத அவ்விடத்தைக்
   கண்டு மனம் வருந்துதல்.

 5 தலைவி தன் துயரநிலையைத் தோழிக்கு உரைத்தல்.

 6 தோழி தலைவியின் துயரத்தை ஆற்றுவித்தல்.