பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா எண்-147                         453


 

 7 குறிப்புத் தவறியதைத் தோழி தலைவன்மேல் ஏற்றிக்கூறுதல்.

 8 தலைவன் குறிப்புத் தவறியதைத் தலைவிமேல் ஏற்றிக் கூறுதல்.

 9 தோழி, தலைவன் செய்த குறிப்பு என்று வேறொன்றைத் தவறாகக்
   கருதித் தலைவி இரவுக்குறிக்கண் வந்து மீண்ட செய்தியைச் சொல்லுதல்.

 10 தான் செய்த குறிப்பை அறிந்தும் தலைவி வரவில்லை என்று
   தலைவன் கூறிய கொடுஞ்சொல்லைப் பாங்கி தலைவிக்குக் கூறுதல்.

 11 தலைவி "என் தவறு அன்றே" என்று கூறி வருந்துதல்.

 12 தலைவன் இரவுக்குறிக்கண் வருங்கால் தாய் உறங்காதிருத்தல்.

 13 நாய் உறங்காது புதுவர்வரவு கண்டு குரைத்தல்.

 14 ஊர்மக்கள் உறங்காது விழித்து உரையாடிக் கொண்டிருத்தல்.

 15 ஊர்க்காவலர் விரைந்து ஊரைச் சுற்றிக் காவல்செய்து வருதல்.

 16 நிலவு வெளிப்பட்டுப் பகல் போல ஒளிவீசுதல்.

 17 கோட்டான் தலைவி வெளிவாராதவாறு அச்சம் தருதல்.

 18 வைகறைப்பொழுது வந்து விட்டது என்பதைக் கோழி கூவித் தெரிவித்தல்.

ஒத்த நூற்பாக்கள்  

     முழுதும்- ந. அ. 160, 161, 162.  

    "மான் விழிக்கு இகுளை மன்வரவு உணர்த்தலும்