பக்கம் எண் :

 466                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     காமம்மிக்க கழிபடர் கிளவியும்12
     தன்னுள் கையாறு எய்திடு கிளவியும்13
     நெறிவிலக்கு வித்தலும்14 குறிவிலக்கு வித்தலும்15
     வெறிவிலக்கு வித்தலும்16 பிறர்விலக்கு வித்தலும்17
     குரவரை வரைவுஎதிர் கொள்ளுவித் தலும்என18
     உரைபெற வகுத்த ஒன்பதிற்று இரட்டியும்
     வரைதல் வேட்கை விரிஎனப் படுமே.

     இது வரைதல்வேட்கை விரி இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி அருமறை செவிலி
 அறிந்தமை கூறல் முதலாகக் குரவரை வரைவு எதிர்கொள்ளுவித்தல் ஈறாகச்
 சொல் பெற வகுத்த பதினெட்டுக் கிளவியும் வரைதல் வேட்கை விரியாம்
 என்றவாறு.

விளக்கம்  

 1 தன் மனத்துயரம் பற்றி வினவிய தோழிக்குத் தலைவி தன்
   களவுஒழுக்கத்தைச் செவிலி அறிந்த செய்தியைக் கூறல்.

 2 தலைவன் இரவுக்குறிக்கண் அரிய வழியில் வருதற்கு அரிதாய்
   இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறல்.

 3 தலைவி தோழியோடு தலைவன் ஊருக்குச் செல்ல ஒருப்படுதல்.

 4 தோழி தலைவனுடைய வரையாமையாகிய கொடுமையை எடுத்துக்கூறி
   அவனைப் பழித்தல்.

 5 "தலைவன் நற்குணம் உடையவனே" என்பதனைத் தலைவி தோழிக்கு
   விளங்கக் கூறுதல்.

 6 தலைவனைக் காணும் கனவு தன்னைத் துன்புறுத்துகின்றது
   என்பதனைத் தலைவி தோழியிடம் கூறுதல்.