பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா எண்-149                         467


 

 7 தலைவி தலைவன் நினைவால் தன் அழகு நாடோறும் அழிந்து
   வருமாற்றைத் தோழியிடம் எடுத்துக்கூறுதல்.

 8 தலைவனுக்குத் தனது துன்பத்தை அறிவுறுத்துதல் வேண்டும் என்று
   தலைவி தோழியிடம் கூறுதல்.

 9 தோழி தலைவியிடம் அவளுடைய குறையை நேர்முகமாக அவளே
   தலைவனிடம் குறிப்பிடுமாறு அறிவித்தல்.

 10 பலரும் கூறும் பழிமொழியை அறிந்து தான் கொண்டுள்ள
   அச்சத்தைத் தலைவி தோழியிடம் கூறுதல்.

 11 தலைவன் இரவுக்குறிக்கண் வரும் வழியின் அருமையை அறிந்து
   தான் அடைந்த வருத்தத்தைத் தலைவி தோழியிடம் சொல்லுதல்.

 12 தலைவி தனக்குத் தலைவனிடம் காமம் மிகுதலால் ஏற்பட்ட மிக்க
   நினைவால் உண்டான துன்பத்தைத் தோழியிடம் குறிப்பிடுதல்.

 13 தலைவி தன்னுள் செயலற்றுச் சிலசொற்கள் கூறுதல்.

 14 முற்கூறிய வழியில் வாராதவண்ணம் தலைவனை விலக்குமாறு
   தலைவி தோழியை வேண்டுதல்.

 15 இரவுக்குறியிடத்து வாராதபடி தலைவனை விலக்குமாறு தலைவி
   தோழியிடம் கூறுதல்.

 16 தலைவியின் மயக்கஉணர்ச்சியைக் கண்ணுற்று அவளைப் பேய்
   தீண்டியது என நினைத்துத் தமர் வேலனைக் கொண்டு முருகவேளை
   வழிபட்டுப் பலியிடும வெறியாட்டை விலக்குமாறு தோழிக்குத் தலைவி
   கூறுதல்.

 17 தன்னை மணம் செய்தற்பொருட்டுத் தமர்பால் வரும் பிறரை
   உண்மை கூறி விலக்கும்படித் தலைவி தோழியை வேண்டுதல்.