வரைவு கடாதல்-தலைவியை மணம் செய்துகொள்ளும் படி தலைவனைப்
பாங்கி வற்புறுத்துதல்.
1 தலைவியின் வேறுபாட்டிற்குக் காரணம் என்ன என்றுகேட்ட
செவிலித்தாய்க்குத் தான் வேறு காரணம் காட்டிக்கூறியதைத் தலைவிக்குத்
தோழி கூறுதல்.
2 பலர் கூறும் பழிமொழிகளைத் தலைவனுக்குப் பாங்கி தெரிவித்தல்.
3 களவொழுக்கத்தைத் தாய் அறிந்தனள் என்பதைத் தலைவனுக்குப்
பாங்கி அறிவுறுத்துதல்.
4 வெறியாடுவித்தலைக் கூறித் தலைவனுக்குத் தோழி அச்சத்தை
உண்டாக்குதல்.
5 தலைவியை அயலார் மணம்செய்துகொள்ள முயல்கின்றார்கள்
என்பதைப் பாங்கி தலைவனுக்குச் சொல்லுதல்.
6 "நீ மணம் செய்துகொள்வதற்குரிய ஏற்பாடுகளோடுவரின் எமர்
ஏற்றுக்கொள்வர்" என்று தோழி தலைவனுக்கு உரைத்தல்.
7 மணம் செய்து கொள்வதற்குரியகாலம் இஃது என்பதனைப் பாங்கி
தலைவனுக்கு உணர்த்துதல்.