8 தலைமகளுடைய மூதறிவைப் பாங்கி தலைவனுக்கு அறிவித்தல்.
9 தோழி குறியிடத்தை மாற்றுதல்.
10 பகலில் வருகின்ற தலைவனை "இரவில் வருக" என்று குறிப்பிடுதல்.
11 இரவில் வரும் தலைவனைப் "பகலில் வருக" என்று வேண்டுதல்.
12 "பகல் இரவு என்ற இருவேளையும் அடிக்கடி வருக" என்று
வேண்டுதல்.
13 "பகலினும் இரவினும் இவ்விடத்தினின்றும் நீங்குவாயாக" என்றல்
14 "நீ இங்ஙனம் வரையாது வந்து ஒழுகுவது உன்னுடைய நாடு ஊர்
குலம் என்பனவற்றின் பெருமைக்குத் தகாது" என்று பாங்கி
தலைவனுக்குக் கூறுதல்.
15 வரும் வழியின்துன்பத்தை நினைத்துத் தலைவி அஞ்சுதலைப் பாங்கி
தலைவனுக்குக் கூறுதல்.
16 தலைவியின் பொறுக்கமுடியாத தன்மையைப் பாங்கி தலைவனுக்கு
மிகக் கூறுதல்.
17 தலைவி இல்லத்தைவிட்டு இருவகைக் குறிக்கும் வெளியே வர
இயலாத நிலையில் இல்லத்தவர் தலைவியைப் புறம் போகாதவாறு காக்கும்
திறம் மிகுதியும் உள்ளவாற்றைத் தோழி தலைவற்குக் கூறுதல்.
18 தலைவியின் காமம் தாங்க இயலாததாகி உள்ள நிலையைத் தோழி
தலைவற்குக் கூறுதல்.
19 கனவு தலைவியைத் துன்புறுத்துமாற்றைத் தோழி தலைவற்குக்
கூறுதல்.
20 தலைவியின் அழகு நாளும் அழியுமாற்றைத் தோழி தலைவற்குக்
கூறுதல்.